விளையாட்டு

இங்கிலாந்து மகளிர் கால்பந்தாட்ட அணியின் முகாமையாளர் பதவி விலகவுள்ளார்


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இங்கிலாந்து மகளிர் கால்பந்தாட்ட அணியின் முகாமையாளர் மார்க் சம்சன்(Mark Sampson)  அணியின் முகாமையாளர் பதவியிலிருந்து விலகவுள்ளார்.

மார்க் நடத்தை தவறியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.  34 வயதான மார்க் கடந்த 2013ம் ஆண்டு இங்கிலாந்து மகளிர் அணியின் முகாமையாளராக நியமிக்கப்பட்டிருந்தார். மார்க் முகாமையாளராக கடமையாற்றிய காலத்தில், இங்கிலாந்து மகளிர் கால்பந்தாட்ட அணி சில முக்கிய போட்டித் தொடர்களில் அரையிறுதி வரையில் முன்னேறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

என்ன காரணத்திற்காக மார்க் பதவிவிலகுகின்றார் என்பது பற்றிய விபரங்கள் வெளியிடப்படவில்லை, ஊடக சந்திப்பு ஒன்றின் மூலம் தமது பதவி விலகலை மார்க்  அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply