Home இந்தியா தனது அரசியல் வாகனத்தை ‘இடப்புறமாக’ ஓட்டிச் செல்ல முனைகிறாரா கமல்?

தனது அரசியல் வாகனத்தை ‘இடப்புறமாக’ ஓட்டிச் செல்ல முனைகிறாரா கமல்?

by admin

ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், ஆழ்வார்பேட்டையிலுள்ள கமலின் இல்லத்திற்கு சென்று அவரை சந்தித்துள்ளார்.  மதியம் 1.30 மணியளவில் விமானத்தில் சென்னை சென்ற கெஜ்ரிவாலை  கமலின் மகள் அக்ஷரா ஹாசன் வரவேற்றார்.  பின்னர் வீடு சென்ற கெஜ்ரிவாலுக்கு கமல் உற்சாக வரவேற்பு அளித்தார்.

ருவிட்டரில் அரசியல் கருத்துகளை  தொடர்ந்து, தெரிவித்து வரும் நடிகர் கமல் அதிமுக ஆட்சியில் ஊழல் நடைபெற்றுவருவதாக  வெளிப்படையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். அதேவேளை கேரளத்தில் வெற்றிகரமாக ஓராண்டு ஆட்சியை கடந்த மே மாதம் நிறைவு செய்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி அரசை அவர் பாராட்டியிருந்தார். மேலும் ஓணம் பண்டிகையையொட்டி கேரள முதல்வர் பினராய் விஜயனையும் சந்தித்தார்.

இந்த நிலையில் அரவிந்த் கெஜ்ரிவாலை இன்று சந்தித்த கமல், அரசியல் குறித்து பேசியதாக தெரிய வருகிறது.  கமலுக்கு அரசியல் தெரியாது என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்திருந்த நிலையில்   தனி கட்சி தொடங்க உள்ளதாக ஒரு பேட்டியில்  நடிகர் கமல் தெரிவித்திருந்தார்.  இந்நிலையில், தனிக்கட்சி தொடங்கி குறுகிய காலத்தில் டெல்லியில்  ஆட்சியைபிடித்த அரவிந்த் கெஜ்ரிவாலை இன்று கமல் சந்திப்பது முக்கியத்துவம் பெறுகிறது.

கமலை போலவே கெஜ்ரிவாலும், அடிப்படைவாத வலதுசாரி கொள்கைகளுக்கு எதிரானவர். பினராய் விஜயன், கெஜ்ரிவால் என இடது பக்க ஆர்வலர்களை கமல் சந்திப்பது அவர் தனது அரசியல் வாகனத்தை ‘இடப்புறமாக’ ஓட்டிச் செல்ல விரும்புவதன் அறிகுறியா என்ற சந்தேகம் அரசியல் தரப்பில் எழுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More