181
அம்பாறை, ஒலுவில் கடலில் இன்று காலை மீன்பிடிக்கச் சென்ற ஒருவர் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ஒலுவில் 4ஆம் பிரிவைச் சேர்ந்த 44 வயதான சம்சுதீன் பஸீல் என்பவரே மேற்படி விபத்தில் உயிரிழந்துள்ளார்.
சடலம், அக்கரைப்பற்று வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இச்சம்பவம் தொடர்பாக அக்கரைப்பற்று காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Spread the love