குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பிரித்தானிய பிரதமர் தெரேசா மேயின் அமைச்சரவை இன்று இரண்டரை மணித்தியாலங்களிற்கு மேல் ஐரோப்பிய ஓன்றியத்திலிருந்து வெளியேறும் விவகாரம் குறித்து கடும் விவாதத்தில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்றைய அமைச்சரவை சந்திப்பின்போது பிரதமர் தெரேசா மே நாளை இத்தாலியில் தான் ஆற்றவுள்ள உரை குறித்து தெளிவுபடுத்தியுள்ளார்.
பிரதமரின் உரையில் இடம்பெற்றுள்ள விடயங்களை அமைச்சர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அமைச்சரவை கூட்டத்தொடர் ஆரம்பமாவதற்கு அரை மணித்தியாலத்திற்கு முன்னர் பிரதமரின் உரையின் பிரதிகள் அமைச்சர்களிடம் வழங்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஐரோப்பிய ஓன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறிய பின்னர் அடுத்த சில வருடங்களை எவ்வாறு எதிர்கொள்வது, ஐரோப்பிய ஓன்றியத்திலிருந்து வெளியேறும்போது பிரித்தானிய விவாகரத்து தொகையாக வழங்கவேண்டிய தொகை போன்ற விடயங்கள் குறித்தும் அமைச்சரவையில் ஆராயப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன