விளையாட்டு

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் இந்தியா முதலிடம்

அவுஸ்திரேலியா அணியுடனான ஒருநாள் தொடரில் 2-0 என்று முன்னிலை பெற்றுள்ள இந்திய அணி சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் முதலிடத்தை பிடித்துள்ளது.   இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துள்ள அவுஸ்திரேலியா அணி ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகின்ற நிலையில் முதலில் இடம்பெற்ற  இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.

ஐந்து ஒருநாள் போட்டிகளில் 2-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில், சர்வதேச ஒருநாள் போட்டிக்கான தரவரிசையில் இந்தியா முதலிடத்தை பிடித்துள்ளது.

முதல் இடத்தில் இருந்த தென்னாப்ரிக்காவை விட 19 புள்ளிகள் பின் தங்கியிருந்த  இந்தியா  நேற்றைய வெற்றியின் மூலம் இந்தியா தென்னாப்ரிக்காவை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்துள்ளது.   டெஸ்ட் தரவரிசையிலும் இந்தியா முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.