குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஜகத் ஜயசூரியவிற்கு எதிரான குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க ஆதாரங்கள் கிடையாது என அரசாங்கம் தெரிவித்துள்ளது. வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன இதனை பாராளுமன்றில் தெரிவித்துள்ளார். முன்னாள் இராணுவத் தளபதியும், அமைச்சருமான பீல்ட் மார்சல் சரத் பொன்சேகாவின் கருத்து அவரது தனிப்பட்ட கருத்து என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரேஸிலில் ஜகத் ஜயசூரியவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவிற்கு அரசாங்கம் ஆதரவளிக்காது என அவர் தெரிவித்துள்ளார். தென் அமெரிக்க நாடுகளைச் சேர்ந்த மனித உரிமை அமைப்புக்கள் அண்மையில் ஜகத் ஜயசூரியவிற்கு எதிராக யுத்தக் குற்றச் செயல் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வழக்குத் தாக்கல் செய்திருந்தன. படைவீரர்களுக்கு உள்நாட்டு வெளிநாட்டு ரீதியில் அழுத்தங்களை பிரயோகிக்க அனுமதிக்கப்படாது என திலக் மாரப்பன தெரிவித்துள்ளார்.