குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சிரிய எதிர்க்கட்சி செயற்பாட்டாளரும், ஊடகவியலாளரான அவரது மகளும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். துருக்கியின் தலைநகர் இஸ்தான்புல்லில் இந்த படுகொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இருவரின் சடலங்களும் தலைநகர் இஸ்தான்புல்லில் மீட்கப்பட்டுள்ளது.
60 வயதான ஒரேயுபா பரகற்( Orouba Barakat ) மற்றும் 22 வயதான ஹல்லா ( Halla ) ஆகியோரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளனர். சிரிய அரசாங்கத்திற்கு எதிராக ஒரேயுபா கருத்துக்களை வெளியிட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இருவரும் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் சம்பவம் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.