147
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்.
நல்லிணக்க முனைப்புக்களை துரிதப்படுத்துமாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் சயிட் அல் ஹூசெய்ன் கோரிக்கை விடுத்துள்ளார். மனித உரிமை பாதுகாப்பு மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தல் ஆகிய விடயங்களில் இலங்கை எட்டியுள்ள முன்னேற்றம் வரவேற்கப்பட வேண்டியது என தெரிவித்துள்ளார்.
எனினும், இந்த முனைப்புக்கள் இன்னும் வேகமாக முன்னெடுக்கப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் நடத்திய சந்திப்பின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love