202
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மாலியில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் மூன்று ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் படையினர் கொல்லப்பட்டுள்ளனர். கொல்லப்பட்ட அமைதி காக்கும் படையினர் பங்களாதேஸை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இஸ்லாமிய தீவிரவாத அமைப்பினர் இந்த தாக்குதல்களை நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வாகனத்தில் பயணித்த படையினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை வெளியிட்டுக் கொள்வதுடன் அவர்களுக்கு தேவையான உதவிகள் வழங்கப்படும் என ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் பணியகம் தெரிவித்துள்ளது.
Spread the love