குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கிழக்கு மாகாணசபைக்கான தேர்தல் துரித கதியில் நடத்தப்பட வேண்டுமென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி கோரியுள்ளது. மாகாணசபையின் அதிகாரங்கள் ஆளுனரிடம் ஒப்படைக்கப்படுவதனை விரும்பவில்லை என கட்சியின் பொதுச் செயலாளர் நிசாம் காரியப்பர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு ஆளுனரிடம் அதிகாரங்கள் ஒப்படைக்கப்பட்டால் அரசியல் அதிகாரத்தை இழக்க நேரிடும் என குறிப்பிட்டுள்ள அவர் தேர்தல் நடத்தப்பட்டால் நிச்சயமாக கட்சி வெற்றியீட்டும் என நம்பிக்கை உண்டு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் தேர்தலை துரித கதியில் நடத்துமாறு அரசாங்கத்திடம் தமது கட்சி கோரியுள்ளதாகவும் நிசாம் காரியப்பர் தெரிவித்துள்ளார்.