332
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கிறிஸ்தவ மத தலைவர்களிற்கும், காவல்துறையினருக்குமிடையே விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று இடம்பெற்றது.
இன்று மாலை 5.30 மணியளவில் குறித்த சந்திப்பு கிளிநொச்சி காவல் நிலைய கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது, காவல்துறையினருக்கும், மத தலைவர்களிற்குமிடையிலுமான நல்லுறவை கட்டியெழுப்பும் நோக்குடன் குறித்த சந்திப்பு இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதன்போது கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ மத தலைவர்களும் அங்கு கலந்து கொண்டிருந்ததுடன், காவல்துறை உயரதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

Spread the love

