உலகம் விளையாட்டு

கனடாவில் மரதன் ஓட்டப் போட்டியில் பங்கேற்ற பலருக்கு மருத்துவ சிகிச்சை


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கனடாவின் மொன்ரியலில் நடைபெற்ற மரதன் ஓட்டப் போட்டியில் பங்கேற்ற பலருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. பத்து கிலோ மீற்றர் தூரத்தைக் கொண்ட குறித்த மரதன் ஓட்டப் போட்டியில் பங்கேற்ற 900 போட்டியாளர்கள் இவ்வாறு நோய்வாய்ப்பட்டு சிகிச்சை பெற்றுக்கொண்டுள்ளனர். அதிக வெப்பம் காரணமாக போட்டியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.

கடுமையான வெப்பத்துடன் கூடிய காலநிலை காரணமாக 42.2 கிலோ மீற்றர் தூரமுடைய மரதன் ஓட்டப் போட்டி நடத்தப்படவில்லை எனவும், போட்டித் தூரகம் 10 கிலோ மீற்றராக குறைக்கப்பட்டது எனவும் தெரிவிக்கப்படுகிறது. வழமையை விடவும் போட்டியாளர்களுக்கு அதிகளவில் மருத்துவ சிகிச்சை அளிக்க நேரிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply