163
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வடகொரியா மீது யுத்தப் பிரகடனம் செய்யவில்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளது. யுத்தப் பிரகடனம் செய்துள்ளதாக வடகொரியா சுமத்தி வரும் குற்றச்சாட்டு அடிப்படையற்றது என வெள்ளை மாளிகை பேச்சாளர் சாரா ஹக்கபி ( Sarah Huckabee ) தெரிவித்துள்ளார்.
வடகொரியா ஆபத்தான செயற்பாடுகளை நிறுத்தத் தவறினால் வேறும் மாற்று வழிகள் பற்றி சிந்திக்க நேரிடும் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்திருந்தது என அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, இவ்வாறான மோதல்கள் பாரிய அழிவுகளை ஏற்படுத்தக் கூடும் என தென்கொரியாவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Spread the love