இலங்கை பிரதான செய்திகள்

மகிந்த அணியிடம் சாய்ந்தனர் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் மூவர்

கிழக்கு மாகாண சபையின் 3  ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிசினை தலைமையில் உருவான  பொதுஜன பெரமுனவில் இணைந்து கொண்டுள்ளனர்.  சந்திர தேவப்பெரும , டபிள்யூ.டி.வீரசிங்க, மற்றும் ரி.எம்.ஜயசேன  ஆகியோரே இன்றையதினம் இவ்வாறு   பொதுஜன பெரமுனவில் இணைந்து கொண்டுள்ளனர்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியானது   ஐ.தேகவுடன் இணைந்து நாட்டை பிளவுபடுத்த முயற்சிப்பதாகவும் அதற்கெதிராக செயற்படும் முகமாகவே தாங்கள்  பொதுஜன பெரமுனவில் இணைந்து கொண்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில் பொதுஜன பெரமுனவின் மலர்மொட்டு சின்னத்திலேயே தாமுமகளமிறங்கவுள்ளதாக  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளமை   குறிப்பிடத்தக்கது.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.