213
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பிரித்தானியாவில், வெளிநாட்டு தொலைக்காட்சி ஒளிபரப்பு கொடுப்பனவு குறித்த விவகாரத்தில் கழங்களுக்கு இடையில் முரண்பாட்டு நிலைமை வெடித்துள்ளது. பிரிமியர் லீக் கழகங்கள் இவ்வாறு முரண்பாட்டை ஏற்படுத்திக் கொண்டுள்ளன. வெளிநாட்டு தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமைகளை வழங்குவதில் இந்த சிக்கல் நிலைமை ஏற்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் 20 கால் பந்தாட்ட கழகங்கள் எதிர்வரும் புதன்கிழமை லண்டனில் கூடி ஆராயவுள்ளன. மூன்று பில்லியன் ஸ்ரெலிங் பவுண்ட்கள் பெறுமதியான கொடுக்கல் வாங்கல் மேற்கொள்ளப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Spread the love