374
யாழில் ஆவா குழுவை சேர்ந்தவர்கள் நேற்றையதினம் ஆயுத பூஜை செய்துள்ளனர். நவராத்திரி விரத ஆயுத பூஜை வழிபாட்டில் நேற்றைய தினம் இந்து மக்கள் ஈடுபட்டனர். அதன் போது, இந்துக்கள் மரபுப்படி தமது தொழில் உபகரணங்கள் , கல்வி உபகரணங்களுக்கு அன்றைய தினம் பூஜை வைத்து வழிபாடு செய்வார்கள் .
அவ்வாறு நேற்றைய தினமும் இந்துக்கள் பூஜை வழிபாட்டில் ஈடுபட்டிருந்தனர். அதேபோல யாழில் பல குற்றசெயலில் ஈடுபட்டு வரும் ஆவா குழு என பெயர் சூட்டப்பட்ட குழு ஆயுத பூஜையில் ஈடுபட்டுள்ளது.
அக் குழுவினர் தமது வாள்கள் , கைக்கோடாரிகள் போன்றவற்றுக்கு பூஜை செய்து அதனை புகைப்படம் எடுத்து தமது முகநூல்களில் பதிவேற்றம் செய்துள்ளனர்.
Spread the love