179
டிஆர் கொங்கோ நாட்டில் ராணுவத்துக்கு சொந்தமான போக்குவரத்து விமானம் விழுந்து நொறுங்கியதில், 30 பேர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இன்று காலை ராணுவத்துக்கு சொந்தமான குறித்த போக்குவரத்து விமானம் தலைநகர் கின்ஷாசாவில் உள்ள நிடோலோ விமான நிலையத்தில் இருந்து சுமார் 30 வீரர்கள் மற்றும் வாகனங்கள், ஆயுதங்களுடன் புறப்பட்ட நிலையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
சுமார் 100 கி.மீ. தூரம் சென்றதும் கட்டுப்பாட்டை இழந்த விமானம், விழுந்து நொறுங்கியதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில் அதில் பயணித்த ஒருவரும் உயிர்பிழைக்க வாய்ப்பு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love