Home இந்தியாநடிகர் சிவாஜி கணேசனின் மணிமண்டபம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது

நடிகர் சிவாஜி கணேசனின் மணிமண்டபம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது

by admin


சென்னை அடையாரில் அமைக்கப்பட்டுள்ள நடிகர் சிவாஜி கணேசனின் மணிமண்டபத்தை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று திறந்து வைத்துள்ளார்.  நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு சென்னை அடையாறு பகுதியில் உள்ள ஆந்திர மகிளா சபா அருகில் தமிழக அரசு .2.80 கோடி ரூபா செலவில் மணிமண்டபம் கட்டி உள்ளது.

இங்கு சிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்களின் புகைப்படங்கள் மற்றும் அரசியல் தலைவர்களுடன் அவர் இருப்பது போன்ற படங்கள் உள்பட 188 புகைப்படங்கள் வைக்கப்பட்டு உள்ளன.  மெரினா கடற்கரை சாலையில் இருந்து அகற்றப்பட்ட சிவாஜி கணேசன் சிலையும் இந்த மணி மண்டபத்தின் நுழைவு வாயிலில் நிறுவப்பட்டு உள்ளது.

இந்நிலையில் சிவாஜி கணேசனின் பிநற்தநாளான  இன்று  ஒக்டோபர் 1ம் திகதி  காலை  அடையாரில் அமைக்கப்பட்டுள்ள நடிகர் சிவாஜி கணேசனின் மணிமண்டபத்தை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்   திறந்து வைத்தார்.

இந்த விழாவில் சிவாஜி கணேசன் குடும்பத்தினர் நடிகர் பிரபு, அவரது மகன் விக்ரம் பிரபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மேலும், நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஷால், கார்த்தி, நாசர், விஜயகுமார், ராதிகா உள்ளிட்ட திரையுலக பிரபலங்களும் பங்கேற்றனர். இதில் திரளான ரசிகர் பெருமக்களும் கலந்து கொண்டனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More