Home இலங்கைஅரசியலமைப்பின் மூலம் பாராளுமன்றத்தை மேலும் பலப்படுத்த வேண்டும் – ஜனாதிபதி

அரசியலமைப்பின் மூலம் பாராளுமன்றத்தை மேலும் பலப்படுத்த வேண்டும் – ஜனாதிபதி

by admin

பிளவுபடாத, ஒன்றுபட்ட தேசத்தில் அனைத்து மக்களினதும் உரிமைகளை உறுதிப்படுத்தும் அரசியலமைப்பின் மூலம் பாராளுமன்றத்தை மேலும் பலப்படுத்துவது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன் தெரிவித்தார்.

பாராளுமன்ற அமர்வுகள் ஆரம்பிக்கப்பட்டு 70 ஆண்டுகள் பூர்த்தியாவதனை முன்னிட்டு நடைபெற்ற விசேட பாராளுமன்ற அமர்வுகளில் பங்கேற்ற பேர் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்றத்தை மேலும் பலப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய ஜனாதிபதி, பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சிகளினதும் உதவியை அதற்காக எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

தனியொருவரிடமுள்ள அதிகாரம் கூட்டாண்மை முறைக்கு வழங்கப்பட வேண்டும் என்பதால் அந்த நியாய தர்மங்களுக்குள் செயற்பட்டு நாட்டில் பொருளாதார சுபீட்சத்தை ஏற்படுத்துவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

சட்டவாக்கம், நிறைவேற்றதிகாரம் மற்றும் நீதித்துறை பிரச்சினைகள் எழாத வண்ணம் செயற்பட வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, மக்களின் இறைமையை பலப்படுத்தும் தலைமை நிறுவனம் என்ற வகையில் பாராளுமன்றத்திற்கு வழங்கப்பட்டுள்ள சட்டவாக்க அதிகாரத்தை ஒருபோதும் எவரும் சவாலுக்குட்படுத்த முடியாத வகையில் பேண வேண்டியதன் அவசியத்தையும், நிறைவேற்றதிகார முறைமைக்குள் ஜனநாயகம், மனித உரிமைகள், அடிப்படை உரிமைகளை பலப்படுத்தி சட்ட ஆட்சியை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More