குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கட்டலோனியா சுதந்திரப் பிரகடன வாக்கெடுப்பின் போது தாக்குதல் நடத்தியமைக்காக ஸ்பெய்ன் அரசாங்கம் மன்னிப்பு கோரியுள்ளது. மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டமைக்கு மன்னிப்பு கோருவதாகத் தெரிவித்துள்ளது. மேலும் கட்டலோனியா பாராளுமன்றில் சுதந்திரப் பிரகடன விவாதம் நடத்தப்படும் என பிராந்திய வெளிவிவகாரத்துறைப் பொறுப்பாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சுமூகமாக பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என ஸ்பெய்ன் பிரதமர் மாரியானோ ராஜோய் தெரிவித்துள்ளார். எவ்வாறெனினும் சுதந்திரப் பிரகடனத்தை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், சர்வதேச தலையீடுகளுக்கு இடமளிக்கப்படாது எனவும் தெரிவித்துள்ளார்.