விளையாட்டு

உலகக் கோப்பை கால்பந்து தகுதி சுற்றில் ஜெர்மனி அணி சாதனை


உலகக் கோப்பை கால்பந்து தகுதி சுற்றில் 10 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று ஜெர்மனி அணி சாதனை படைத்துள்ளது. 2018 ஆம் ஆண்டு ரஷ்யாவில் நடைபெறவுள்ள  உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கு நடப்பு சம்பியனான ஜெர்மனி அணி ஏற்கெனவே தகுதி பெற்றுவிட்ட நிலையில்   தகுதி சுற்றின் கடைசி ஆட்டத்தில் நேற்று முன்தினம்   அஜர்பைஜான் அணியை எதிர்கொண்டது.

இதில் ஜெர்மனி 5-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.  தகுதி சுற்றில் அனைத்து ஆட்டங்களிலும் ஜெர்மனி அணி வெற்றி பெற்று உலகக் கோப்பை தொடருக்குள் நுழைவது இதுவே முதன் முறையாகும்.   தகுதி சுற்று ஆட்டங்களில் ஜெர்மனி அணி இம்முறை 43 கோல்கள் அடித்து சாதனை படைத்துள்ளது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply