விளையாட்டு

உலகக் கிண்ண தகுதிகாண் போட்டியில் சிரியாவை வீழ்த்தி அவுஸ்திரேலியா வெற்றி

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
உலகக் கிண்ண கால்பந்தாட்ட தகுதிகாண் போட்டித் தொடரில் சிரியாவை வீழ்த்தி, அவுஸ்திரேலியா வெற்றியீட்டியுள்ளது.
சிட்னியில் நடைபெற்ற 2018ம் ஆண்டுக்கான உலகக் கிண்ண கால்பந்தாட்ட தகுதிகாண் போட்டியில் அவுஸ்திரேலிய அணி இரண்டுக்கு ஒன்று என்ற கோல் கணக்கில் சிரியாவை வீழ்த்தியுள்ளது

அவுஸ்திரேலிய அணியின் ரிம் சாயில் போட்டியின் 13ம் மற்றும் 109ம் நிமிடங்களில் கோல்களைப் போட்டு அணியின் வெற்றியை உறுதி செய்தார். சிரிய அணியின் சார்பில் ஒமல் அல் சோமா போட்டியின் ஆறாவது நிமிடத்திலேயே கோல் ஒன்றைப் போட்டு, சிரியாவின் உலகக் கிண்ண தகுதிகாண் எதிர்பார்ப்பை அதிகரித்திருந்தார்.

நிர்ணயிக்கப்பட்ட 90 நிமிடங்களில் இரு அணிகளும் தலா ஒரு கோல்களை மட்டுமே போட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலதிக நேரத்தில் அவுஸ்திரேலியாவின் ரிம் சாயில் மற்றுமொரு கோலை போட்டு அணியின் வெற்றியை உறுதி செய்திருந்தார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply