இலங்கை பிரதான செய்திகள்

இலங்கை பின்லாந்துக்டையில் சக்தி வளம் தொடர்பிலான இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொள்ளத் தீர்மானம்


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

இலங்கை மற்றும் பின்லாந்து பிரதமர்களுக்கு இடையில் சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது. பின்லாந்திற்கு உத்தியோகபூர்வ பயணம்  மேற்கொண்டுள்ள இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அந்நாட்டு பிரதமர் யுகா சில்பிலா ( Juha Sipilä ) வை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையில் சக்தி வளம் தொடர்பிலான இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொள்ளத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மீள்சுழற்சி செய்யக்கூடிய தூய சக்தி வளங்களுக்கு கூடுதல் சந்தர்ப்பம் வழங்கப்படும் என இரு நாடுகளும் தெரிவித்துள்ளன.
தொழில்நுட்பத்துறைசார் உதவிகளை இலங்கைக்கு வழங்க ஆர்வம் காட்டுவதாக பின்லாந்து தெரிவித்துள்ளது. இதேவேளை, இலங்கைக்கு வழங்கி வரும் ஒத்துழைப்புக்கள் பாராட்டப்பட வேண்டியவை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link