குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
2017 டிசம்பரிற்குள் பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்படாவிட்டால் ஐரோப்பிய ஓன்றியம் தனது தந்திரோபாயத்தை மறுபரிசீலனை செய்யவேண்டியிருக்கும் என ஐரோப்பிய பேரவையின் தலைவர் கருத்து வெளியிட்டுள்ளார். பிரித்தானியாவுக்கும் ஐரோப்பிய ஓன்றியத்திற்கும் உடன்பாடு எதுவும் ஏற்படாமல் பிரித்தானியா அதிலிருந்து வெளியேறுவது குறித்த சூழ்நிலையை எதிர்கொள்ள தயாராகவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பிரித்தானியா உடன்பாடு ஏற்படாத நிலையில் வெளியேறிச்செல்வதற்கான சூழலை எதிர்கொள்ள தயாராகிவருவதாக அறிகிறோம் எனவும் ஆனால் தாங்கள் அதற்கு தயாரில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்
இந்த வருடத்தில் மிகமெதுவாகவே முன்னேற்றம் ஏற்பட்டால் தாங்கள் தங்கள் தந்திரோபாயத்தை மீள்பரிசீலனை செய்யவேண்டியிருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.