குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தாய்வான் வங்கியின் பல கோடி ரூபாய் பணமோசடியில் கைதாகியுள்ள இலங்கையின் பிரபல லிற்றோ எரிவாயு நிறுவன தலைவர் முன்னாள் நிதியமைச்சர் ரவிகருணாநாயக்கவிற்கும் தொடர்புள்ளதாக ஜேவிபி குற்றம்சாட்டியுள்ளது.
கடந்த ஆட்சிக்காலத்தில் இங்கு கொள்ளையடிக்கப்பட்ட பணம் வெளிநாட்டில் வைப்பிலிடப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன என தெரிவித்துள்ள ஜேவிபி தலைவர் அனுரகுமார திசநாயகக்க நல்லாட்சிக்காலத்தில் வெளிநாட்டில் கொள்ளையடிக்கப்பட்ட பணம் இலங்கையில் வைப்பிலிடப்படுவதாக தெரிpத்துள்ளார்.
அண்மையில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் நிதிமோசடி தொடர்பில் கைதாகியுள்ள லிற்றோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் ரவி கருணாநாயக்கவிற்கு நெருக்கமானவர் எனவும் ஜேவிபியின் தலைவர் தெரிவித்துள்ளார்.
அவரை இந்த பதவிக்கு நியமிக்க உத்தரவிட்டவர் யார் , இந்த நிலையில் யாருடைய தேவைக்காக அவர் இந்த பதவியில் நியமிக்கப்பட்டார் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.