குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
2020 இல் ஸ்ரீலங்கா சுதந்திரகட்சி தலைமையிலான ஆட்சியொன்றை அமைக்கும் எதிர்பார்ப்பே தங்களிற்கு இருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஐக்கியமக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
மேலும் இனி கூட்டாட்சியொன்றை ஏற்படுத்துவதற்கான அவசியமொன்று ஏற்படாது எனவும் தனித்துப்போட்டியிட்டு ஆட்சிக்கு வருவதுதான் தமது எதிர்பார்ப்பு எனவும் அவர் தெரிவித்துள்ளார். சுதந்திரகட்சி அப்பழுக்கற்ற கட்சியாகும் எனவும் ஜனாதிபதி சிறிசேன சுத்தமான ஆட்சியை முன்னnடுத்து வருகின்றார் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
ஊழல் மோசடிகளற்ற சுத்தமானவர்களையே தாங்கள் தேர்தலில் களமிறக்குவோம் எனவும் 2020 இல் ஆட்சியமைக்க முடியும் என்ற எதிர்பார்ப்பே தம்மிடம் உள்ளது என்று அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார். ஐக்கியதேசியகட்சியுடன் செய்துகொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஓப்பந்தம் இந்த வருடம் டிசம்பர் மாதத்துடன் முடிவடைகின்ற நிலையில் தற்போதைய நிலையில் கூட்;டாட்சியிலிருந்து விலகுவது குறித்து இன்னமும் சிந்திக்கவி;ல்லை எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.