குளோபல் தமிழ் செய்தியாளர்
முல்லைத்தீவு கடலுக்கு குளிக்கச் சென்றபோது இரண்டு இளைஞர்கள் காணமல் போயிருந்தனர். இன்று பிற்பகல் இரண்டு மணியளவில் விடுமுறையை கழிப்பதற்காக நணபர்களுடன் நீராடச் சென்ற வேளையிலேயே குறித்த இளைஞர்கள் இருவரும் காணாமல் போயிருந்தனர்.
இதில் முல்லைத்தீவு உண்ணாப்புலவை சேர்ந்த 18 வயதுடைய அன்ரனி க்லாடஸ் வினோதன் குரூஸ் மற்றும் முல்லைத்தீவு மணற்குடியிருப்பை சேர்ந்த 17 வயதுடைய அன்ரன் அமல்ராஜ் டினோஜன் ஆகிய மாணவர்களே கடலில் மூழ்கிய நிலையில் காணாமல் போயிருந்தனர்.
இவ்வாறு காணாமல் போனவர்களில் ஒருவர் இன்று மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார் எனவும் காணாமல்போன மற்றையவரை தேடும் பணிகள் இடம்பெறுகின்றதெனவும் தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை கடற்படை மற்றும் மீனவர்கள் இணைந்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.