குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வடகொரியாவை முற்றாக அழித்துவிடப்போவதாக டிரம்ப் விடுத்துள்ள எச்சரிக்கையானது முழு உலகையும் அழிக்கப்போவதாக விடுக்கப்படும் எச்சரிக்கையாகும் என வடகொரியா தெரிவித்துள்ளது. வடகொரியாவினால் அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தி;ற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள கடிதத்திலேயே இந்த தகவல் காணப்படுகின்றது.
அணுவாயுத சக்தியான வடகொரியாவை அணுவாயுத அச்சுறுத்தல் மூலம் அடிபணிய வைக்கலாம் என டிரம்ப் கருதினார் என்றால் அது மிகப்பெரும் தவறாகவும் அறியாமையை வெளிப்படுத்துவதாகவும் அமையும் என வடகொரியா தெரிவித்துள்ளது.
வடகொரியா அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வைத்துள்ள குறித்த கடிதத்திற்கு பல்வேறு நாடுகளிற்கான பகிரங்க கடிதம் என தலைப்பிட்டுள்ளதுடன் அதனை ஆசியாவின் பல நாடுகளிற்கும் அதனை அனுப்புவதாகவும் தெரிவித்துள்ளது.