154
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சுற்றாடலுக்கான நீலப்பசுமை விருதினை கிளிநொச்சி பிராந்திய விவசாய ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையம் பெற்றுக்கொண்டுள்ளது.
இலங்கையின் ஜனாதிபதியினால் சுற்றாடலுக்கான நீலப்பசுமை விருது வழங்கும் வைபவம் மத்திய சுற்றாடல் அதிகார சபையால் ஒழுங்குபடுத்தப்பட்டு கடந்த கடந்த வாரம் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இதன் போது ஜனாதிபதியினால் இம்முறை நீலப்பசுமை விருது கிளிநொச்சி பிராந்திய விவசாய ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையத்திற்கு கிடைத்துள்ளது.
இந் நீலப்பசுமை விருதுக்காக மதிப்பிடும் குழு பின்வரும் விடயங்களை கவனத்தில் கொண்டே மதிப்பிட்டு இவ்விருதினை வழங்கியுள்ளது.
• உயிரியல் பல்வகைமை பேணல்
• சேதனப்பயிர்ச் செய்கை பற்றிய ஆராய்ச்சிகளின் தன்மை
• சேதனப்பயிர்ச் செய்கை தொடர்பான ஊக்குவிப்புக்கள்
• விவசாயம் சார்கழிவுகளை சரியான முறையில் பரிகரித்தல்
• கிடைக்கும் வளங்களை வினைத்திறனாக பயன்படுத்துதல்
• சுற்றயல்களின் சுத்தம்
• விவசாயப்பொருட்களின் பெறுமதிசார் நடவடிக்கைகள்
• நிறுவனத்தின் சமுதாயம் சார் பங்களிப்புக்கள் போன்ற விடயங்களாகும்.
இவ்வகையில் சுற்றாடல் நலன் பேணும் பண்ணைகளில் பிராந்திய விவசாய ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையம் கிளிநொச்சியானது தெரிவாகி விருதினையும் பெற்றுள்ளது.
போரினால் பாதிப்படைந்து மீள்கட்டுமானப்பணிகள் ஆராய்ச்சிகள் மற்றும் சுற்றயல் சார்ந்த சகல விடயங்களிலும் துரித கதியில் முன்னேறி இந் நிலையத்தில் பணியாற்றும் சகல தரப்பினரிதும் ஒத்துழைப்புடன் இவ்விருது பெற்றுக்கொள்ளப்பட்டமை மகிழ்ச்சியளிக்கின்றது. எமது நிலையத்தை சார்ந்த அனைத்து உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் பங்களிப்பே இவ்உன்னத நிலையை எட்ட முடிந்துள்ளது என அந் நிலையத்தின் மேலதிகப்பணிப்பாளர் (ஆராய்ச்சி) கலாநிதி. சி.ஜே.அரசகேசரி மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
Spread the love