விளையாட்டு

ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான தரவரிசைப் பட்டியலில் தென்னப்பிரிக்கா முதல் இடத்துக்கு முன்னேற்றம்

ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான ஐசிசி தரவரிசைப் பட்டியலில்   தென்னப்பிரிக்கா முதல் இடத்துக்கு முன்னேறியுள்ளது. கடந்த புதன்கிழமை நடைபெற்ற தென் ஆப்பிரிக்கா – பங்களாதேஸ் அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி, 104  ஓட்ட  வித்தியாசத்தில் வென்றது.  இந்த வெற்றியின் மூலம் ஒருநாள் போட்டிக்கான   தரவரிசைப் பட்டியலில் தென் ஆப்பிரிக்க அணி முதல் இடத்துக்கு முன்னேறியுள்ளது.

தென்னப்பிரிக்கா  அணி தற்போது 52 போட்டிகள் மூலம் 6,244 புள்ளிகளைப் பெற்றுள்ளது. இதுவரை முதல் இடத்தில் இருந்த இந்திய அணி, தற்போது 50 போட்டிகளில் பெற்ற 5,993 புள்ளிகள் மூலம் 2-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply