186
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
துருக்கி வங்கிகள் மீது அமெரிக்கா அபராதம் விதிக்கக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. துருக்கியின் ஆறு வங்கிகள் மீது இவ்வாறு பல பில்லியன் டொலர் அபராதம் விதிக்கப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. தடை விதிக்கப்பட்டுள்ள ஈரானுடன் தொடர்பு பேணியதாக குறித்த துருக்கி வங்கிகள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இவ்வாறான ஓர் நிலையில் அமெரிக்கா துருக்கி வங்கிகள் மீது அபராதம் விதிக்கப்படக்கூடும் என தெரிவிக்கப்படுகிறது. எனினும், உத்தியோகபூர்வமாக அமெரிக்கா துருக்கி வங்கிகளுக்கு எதனையும் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love