குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அகதிகள் தொடர்பான சட்டங்களை மேலும் கடுமையாக்கும் முயற்சியில் அமெரிக்கா முனைப்பு காட்டி வருகின்றது. ஏற்கனவே அமெரிக்காவில் குடியேறியவர்களின் குடும்ப உறுப்பினர்கள் அகதிக் கோரிக்கை விடுக்கும் போது அவர்களை குடும்பத்துடன் இணைக்க அனுமதியளிக்கும் திட்டத்தை இடைநிறுத்த ட்ராம்ப் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
மேலும் குடியேறியுள்ள அகதிகளின் குடும்ப உறுப்பினர்கள் இணைந்து கொள்வதற்கு இதுவரை காலமும் அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. எனினும் தற்போது இந்த அவகாசத்தை இடைநிறுத்துவதற்கு ட்ராம்ப அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அகதிகளின் கைவிரல் அடையாளம் பதிவிடுவது தொடர்பிலும் புதிய நடைமுறைகள் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இவ்வாறான காரணிகளினால் அகதிகளுக்கு புகலிடம் வழங்குவதில் கால தாமதம் ஏற்படக் கூடும் என தெரிவிக்கப்படுகிறது.

President Donald Trump, center, with Vice President Mike Pence, left, and Defense Secretary James Mattis, right, watching, signs an executive action on extreme vetting at the Pentagon in Washington, Friday, Jan. 27, 2017. (AP Photo/Susan Walsh)