குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ கைது செய்யப்படக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. கோதபாயவை கைது செய்வது குறித்து அண்மையில் உயர்மட்டப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
அரசாங்க அதிகாரிகள், சட்ட மற்றும் பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு இடையில் இந்தப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
கோதபாய ராஜபக்ஸ கடந்த வாரம் அமெரிக்காவிலிருந்து நாடு திரும்பியிருந்தார்.
விமான நிலையத்தில் வைத்தே கோதபாயவை கைது செய்ய திட்மிடப்பட்டிருந்த போதிலும் பின்னர் சில அதிகாரிகளின் ஆலோசனைக்கு அமைய இந்த திட்டம் கைவிடப்பட்டுள்ளது. தம்மை கைது செய்ய உள்ளமை குறித்து கோதபாயவிற்கு தகவல் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மிக் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பிலேயே கோதபாய ராஜபக்ஸ கைது செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.