தென்னிந்திய நடிகர் சங்க செயலாளர் நடிகர் விஷாலின் தயாரிப்பு நிறுவனத்தை ஜிஎஸ்டி நுண்ணறிவுப் பிரிவை சேர்ந்த அதிகாரிகள் திடீர் சோதனைக்கு உள்ளாக்கியுள்ளனர். மத்திய கலால் வரித்துறையின் கீழ் உள்ள ஜிஎஸ்டி நுண்ணறிவுப் பிரிவினர் சுமார் ஒருமணி நேரமாக சோதனை நடத்தியுள்ளனர்.
நடிகர் விஷாலினால் நடாத்தப்படும் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் ஜிஎஸ்டி வரியினை உரிய வகையில் செலுத்தி வருகின்றதா என்பதை பரிசிலீப்பதற்காகவே இந்த பிரசோதனை நடதப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விசாரணை இடம்பெற்ற போது நடிகர் விஷால் அங்கிருக்கவில்லை என்றும் அவரது நிறுவன முகாமையாளரும் அங்கு இருக்கவில்லை என்றும் கூறப்படுகின்றது. எனினும் அலுவலகத்தில் உள்ள ஊழியர்கள் உரிய ஆவணங்களை குறித்த அதிகாரிகளுக்கு சமர்பித்துள்னர்.
நடிகர் விஷால் இந்தியாவில் மத்தியில் ஆளும் அரசை விமர்சித்து வருவதன் காரணமாகவே இவ்வாறு சோதனை நடத்தப்பட்டுள்ளதாக நடிகர் கருணாஸ் குற்றம் சுமத்தியிருப்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.