விளையாட்டு

உலகின் தலைசிறந்த கால்பந்தாட்ட வீரர் விருது ரொனால்டோவிற்கு


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
உலகின் தலைசிறந்த கால்பந்தாட்ட வீரர் என்ற விருது கிறிஸ்டியானோ ரொனால்டோவிற்கு வழங்கப்பட்டுள்ளது. சர்வதேச கால்பந்தாட்டப் பேரவையினால் நடத்தப்படும் வருடாந்த விருது வழங்கும் நிகழ்வில், சிறந்த ஆண் கால்பந்தாட்ட வீரர் என்ற விருது ரொனால்டோவிற்கு வழங்கப்பட்டுள்ளது.

உலகின் முதனிலை வீரர்களான நெய்மர், லயனொல் மெஸ்ஸி உள்ளிட்டவர்களை பின்தள்ளி, ரொனால்டோ தலைசிறந்த வீரர் என்ற விருதினை பெற்றுக்கொண்டுள்ளார். ரொனால்டோ பேர்ர்த்துகல் தேசிய அணியின் சார்பாகவும், ரியல் மட்ரீட் கழகத்தின் சார்பிலும் விளையாடி வருகின்றார்.

சம்பியன்ஸ் லீக் மற்றும் லா லீகா போட்டித் தொடர்களில் ரியல் மட்ரீட் கழகம் சிறந்த திறமைகளை வெளிப்படுத்துவதற்கு ரொனால்டோவின் பங்களிப்பு மிகவும் முக்கியமானதாக அமைந்திருந்தது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.