குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சேர்பியாவில் ஓய்வூதியம் பெறுவோர் போராட்டமொன்றை நடத்தியுள்ளனர். சர்வதேச நாணய நிதியத்துடன் செய்து கொண்ட உடன்படிக்கை ஒன்று தொடர்பில் எதிர்ப்பை வெளியிட்டு ஓய்வூதியம் பெற்றுக் கொள்வோர் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கையின் காரணமாக ஓய்வூதியக் கொடுப்பனவுகள் குறைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அரசாங்கத்தின் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை சுமத்தி இந்தப் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. அலெக்ஸாண்டார் வூசி ( Aleksandar Vucic ) பிரதமராக பதவி வகித்த 2015ம் ஆண்டில் சர்வதேச நாணய நிதியத்துடன் இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த உடன்படிக்கையினால் சுமார் 700,000 ஓய்வூதியம் பெற்றுக் கொள்வோர் தமது கால்வாசி வருமானத்தை இழக்க நேரிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.