குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சிறைக்கைதிகளில்ஒரு பிரிவினைரை வாக்களிப்பதற்கு அனுமதிப்பது குறித்து பிரித்தானியா ஆராய்ந்து வருகின்றது. ஒரு வருடத்திற்கு குறைவான கால தண்டனையை அனுபவிக்கும் கைதிகளிற்கே வாக்களிப்பதற்கான உரிமையை வழங்குவது குறித்து பிரித்தானியாவின் நீதியமைச்சு ஆராய்கின்றது.
பிரித்தானியா, சிறைக்கைதிகளிற்கு வாக்களிப்பதற்கான உரிமையை வழங்கமறுத்துவந்ததை ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் கடுமையாக விமர்சித்து வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. எனினும் பிரித்தானியா ஐரோப்பிய ஓன்றிய நீதிமன்றத்தின் வேண்டுகோளை நிராகரித்து வந்துள்ளது.
இந்த நிலையிலேயே தற்போது ஓரு வருடத்திற்கு குறைவான கால தண்டனையை அனுபவிக்கும் கைதிகளிற்கு வாக்களிப்பதற்கான உரிமையை வழங்குவது குறித்து பிரித்தானிய நீதியமைச்சு ஆராய்கின்றது.