குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கிளிநொச்சி இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் தலைவர் வழக்கொன்றுக்காக இன்று (01) கிளிநொச்சி நீதவான் நீதிமன்றினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். கிளிநொச்சி திருநகா் கிராமத்தில் உள்ள காணிப் பிணக்கு ஒன்று தொடர்பில் காணிக்கு உரிமை கோரும் நபரினால் கிளிநொச்சி காவல் நிலையத்தில் முறைபாடு செய்யப்பட்டிருந்தது. இந்தநிலையில் குறித்த வழக்கு கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றுக்கு வந்த நிலையில் நீதி மன்று தலா ஜம்பதாயிரம் பெறுமதியான இரண்டு ஆட்பிணையில் செஞ்சிலுவை சங்கத்தின் தலைவரை பிணையில் செல்ல அனுமதித்தோடு, வழக்கினை ஜனவரி 22 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்துள்ளது.
குறித்த காணியை தற்போது உரிமை கோருபவருக்கு வழங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வந்த கிளிநொச்சி இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் தலைவரும் அவரின் குழுவினரும், தற்போது காணியை உரிமை கோருபவருக்கே வழங்குவதற்கும் சம்மதம் தெரிவித்துள்ளனா் என காணி உரிமை கோருபவரினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.