தென்பகுதி ஏமனில் உள்ள சாடா மாகாணத்தில் சவுதி அரேபியா தலைமையிலான விமானப்படை இன்று நடத்திய தாக்குதலில் 29 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 17 பேர் காயமடைந்துள்ளனர். ஏமனில் அரசுக்கு எதிராக ஈரானின் ஆதரவுடன் உள்நாட்டு ஹவுத்தி புரட்சிப் படையினர் கடந்த மூன்றாண்டுகளாக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அரசுப் படையினருக்கு சவுதி அரேபியா தலைமையிலான படையினர் ஆதரவு அளித்து வருகின்றனர்.; இந்நிலையில், அந்நாட்டின் தென்பகுதியில் உள்ள சாடா மாகாணத்தில் ஹவுத்தி படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள சஹர் மாவட்டத்தில் பிரபல வணிக பகுதியில் உள்ள விடுதி மீது சவுதி அரேபியா நாட்டின் தலைமையிலான விமானப்படை இன்று நடத்திய தாக்குதலில் பொதுமக்களில் 29 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலில் பல கட்டிடங்கள் தரைமட்டமாகியுள்ளதாகவும் உள்ளு}ர் ஏமன் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.