Home இலங்கைமஹிந்தவிற்கு தலைமைப் பதவி வழங்கினால் மட்டுமே சுதந்திரக் கட்சியில் இணைந்து கொள்ள முடியும்

மஹிந்தவிற்கு தலைமைப் பதவி வழங்கினால் மட்டுமே சுதந்திரக் கட்சியில் இணைந்து கொள்ள முடியும்

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு கட்சியின் தலைமைப் பதவி வழங்கினால் மட்டுமே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொள்ள முடியும் என பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார். கட்சியின் பொதுச் செயலாளர் பதவி கூட்டு எதிர்க்கட்சியின் உறுப்பினர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.

ஹாலி எல பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்து மக்களுக்கு நம்பிக்கை கிடையாது என தெரிவித்துள்ள அவர் அனைவரினதும் தேவை ஓர் தேர்தலாகும் என அவர் தெரிவித்துள்ளார். தேர்தலை நடத்துவதற்காக போராட்டங்களை தொடரப் போவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More