குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கிளிநொச்சி கண்ணன் கோவில் நிதியில் அதன் கணக்கறிக்கையின் படி ஒரு இலட்சத்து 70 ஆயிரம் ரூபாவை காணவில்லை எனவும் வங்கி மீதியில் ஜந்து இலட்சதது 97 ஆயிரத்து 862 ரூபாவுக்கும் கணக்கறிக்கையில் இடம்பெறவில்லை எனவும் அதற்கு என்ன நடந்தது என்று நிர்வாகப் பொறுப்பில் உள்ளவா்கள் பதில் கூறவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாதாந்த கணக்கறிக்கையின் படி ஒரு மாதத்தின் இறுதி காசு மீதி அடுத்த மாத ஆரம்ப மீதியாக காணப்படும். ஆனால் கண்ணன் கோவில் கணக்கறிக்கையின் படி 2017 ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை கணக்குகள் சீராக பேணப்பட்டுள்ளன. இதன் பின்னர் 2017 மே மாத்தின் இறுதி காசு மீதி 122263 ரூபா இந்த மீதி யூன் மாதம் ஆரம்ப காசு மீதியாக வரவு வைக்கப்படல் வேண்டும் ஆனால் யூன் மாத ஆரம்ப காசு மீதி 72263 வாக காட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் 50000 ரூபா பணத்திற்கு என்ன நடந்தது என்று தெiரியவில்லை.
அவ்வாறே யூன் மாத இறுதி காசு மீதி கணக்கறிக்கையின் படி 93317 ரூபா இது யூலை மாதம் ஆரம்ப மீதியாக காட்டப்படல் வேண்டும் ஆனால் யூலை கணக்கறிக்கையில் 13317 என 80000 ரூபா குறைத்து காட்டப்பட்டுள்ளது. மேலும் வங்கியில் உள்ள இருப்பு நிதியை 41491 ரூபாவை யூன் மாதம் காசுக் கணக்கில் செலவில் காட்டியமை மூலம் காசுக் கணக்கில் இருந்து 41491 பணம் பெறப்பட்டுள்ளது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்தோடு ஏப்ரல் மாதம் வங்கி மீதியாக 6393353.93 ரூபா கணக்கறிக்கையில் காட்டப்பட்டுள்ளது. பின்னர் யூலை மாதம் 41491.68 எனக் காட்டப்பட்டுள்ளது. ஆனால் மே, யூன், யூலை மாதங்களில் கணக்கறிக்கையில் வங்கியிலிருந்து பணம் மீள பெறப்பட்டமைக்கான எவ்வித பதிவுகளும் காணப்படவில்லை. கணக்கு விதிமுறைகளின் படி வங்கியில் வைப்பிலிருந்து பணம் மீளப்பெறப்பட்டால் காசு கணக்கின் வரவில் பதியப்படவேண்டும். இது இங்கு இடம்பெறவில்லை. எனவே 597862.25 ரூபாவுக்கும் என்ன நடந்தது என்றும் கூறப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கண்ணன் ஆலய பரிபாலன சபையின் தலைவா் பசுபதிபிள்ளை அவா்களை தொடர்பு கொண்டு வினவிய போது மேற்படி தவறு ஒன்று இடம்பெற்று விட்டது என்றும் அது தற்போது சீர் செய்யப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டார்