குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பிரித்தானியாவின் புதிய பாதுகாப்பு அமைச்சராக கவின் வில்லியம்சன் நியமிக்கப்பட்டுள்ளார். சேர் மைக்கல் பலோன் நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற பாலியல் துன்புறுத்தல்கள் விவகாரத்தில் சிக்கி தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதை தொடர்ந்தே வில்லியம்சன் பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
நேற்று புதன் கிழமை தனது பதவியை இராஜினாமா செய்திருந்த பலோன் பிரித்தானியாவின் படையினரிடமிருந்து எதிர்பாhக்கப்படும் தராதரத்தை தான் பூர்த்திசெய்யவில்லை என குறிப்பிட்டிருந்தார். இதேவேளை தனது நியமனத்திற்கு பின்னர் அறிக்கையொன்றை விடுத்துள்ள வில்லியம்சன் படையினர் ஆற்றும் பெரும் பணிக்கான மரியாதை அவர்களிற்கு கிடைப்பதை உறுதிசெய்வேன் என குறிப்பிட்டுள்ளார்.