Home இலங்கைபுஸ்ஸல்லாவையில் ஐ.தே.கட்சிக்கு எதிராக ஜ.தே.கட்சி ஆர்ப்பாட்டம்

புஸ்ஸல்லாவையில் ஐ.தே.கட்சிக்கு எதிராக ஜ.தே.கட்சி ஆர்ப்பாட்டம்

by admin

கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் வீதி அபிவிருத்தி மற்றும் உயர்கல்வி அமைச்சரும் பாராளுமன்ற சபை முதல்வருமான லக்ஸ்மன் கிரியல்லவின் புஸ்ஸல்லாவ பிரதேச ஆதரவளர்களிடையே ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக இரு குழுக்களாக பிரிந்து நகரத்தில் பிரதான பாதையில் வசந்தா சினிமா மண்டபத்திற்கு அருகில் ஒரு குழுவும் நகர புதிய சந்தை தொகுதி அருகில் ஒரு குழுவினரும் ஆர்ப்பாட்டத்தில் இன்று (05.11.2017) ஈடுபட்டனர்.

குறித்த பிரசேத்தில் அமைச்சரின் மக்கள் தொடர்பாடல் அதிகாரியாக செயற்பட்டு வரும் அசோக ஹெயரத் என்பரின் செயற்பாடுகள் ஒரு பகுதியினருக்கு திருப்தியாகவும் ஒரு பகுதியினருக்கு திருப்தி இன்மை காரணமாகவும் ஏற்பட்ட கருத்து முரண்பாடே இந்த ஆர்பாட்டத்திற்கு காரணமாக இருந்துள்ளது.  மக்கள் தொடர்பாடல் அதிகாரிக்கு எதிரானவர்கள் இவரின் தன்னலமான செயற்பாடியால் எதிர்காலத்தில் நடைபெற இருக்கும் உள்ளுராட்சி சபைக்கான தேர்தலில் தங்களுக்கு ஆசனம் வழங்கபடவில்லை எனத் தெரிவித்துள்ளனர்.

புஸ்ஸல்லாவ பிரதேசத்தில் அபிருத்திகள் ஸ்தம்பிதம் அடைவதாகவும் மோ சடிகள்  துஸ்பிரயோகற்கள் நடைபெருவதாகவும் தங்களிடம் கலந்து உரையாடாமல் புஸ்ஸல்லாவ  பிரதேசத்திற்கு புதிய அமைப்பாளர் நியமித்து உள்ளதாகவும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தாங்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபடுவதாக கூறினர்.  இதற்கு   லக்ஸ்மன் கிரியல்ல அவர்கள் உடனடி தீர்வை ஏற்படுத்துவதாக தெரிவித்ததனையடுத்து அவரை ஐ..தே.கட்சியை வழி நடத்துமாறு கோரிக்கை விட்டனர்.

மக்கள் தொடர்பாடல் அதிகாரிக்கு ஆதரவான குழுவினர் மேற்படி குற்றசாட்டுகள் பொய்யானவை என்றும் குறித்த நபர்கள் மோசடி மற்றும் வேறு கட்சிகளை சார்ந்தவர்கள் எனவும் தெரிவித்துள்ளனர்.  குறித்த  தொடர்பாடல் அதிகாரியினால் புஸ்ஸல்லாவையில் பல அபிவிருத்திகள் ஏற்பட்டுள்ளன எனவும் அவருக்கு தாங்கள் ஆதரவாக இருப்போம் எனவும் தெரிவித்துள்ளனர்.

ஒரு கட்சிக்குள்ளேயே இரு குழுக்கள் உறுவாகி மோதல்கள் ஏற்படுவது எதிர் வரும் உள்ளுராட்சி சபை தேர்தலில் ஐ.தே.கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று   கருத்து தெரிவிக்கப்படுகின்ற நிலையில்    அமைதியாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டம் குறித்த நேரத்தில் கலைந்துச் சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More