குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வரவு செலவுத் திட்டத்திற்கான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யோசனைகள் ஒப்படைக்கப்பட்டுள்ளது. நிதி அமைச்சர் மங்கள சமரவீரவிற்கு கட்சியின் பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
மக்களின் வாழ்க்கைச் செலவினை குறைத்தல், நாட்டின் எதிர்கால அபிவிருத்தி மற்றும் கல்வி சுகாதார மேம்பாடு என்பன குறித்து யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைத்து மக்களுக்கு நிவாரணங்களை வழங்குமாறு நிதி அமைச்சர் மங்கள சமரவீரவிடம் கோரியதாகத் தெரிவித்துள்ளார். 2018ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட யோசனை எதிர்வரும் 9ம் திகதி நிதி அமைச்சர் மங்கள சமரவீரவினால் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.