216
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கிளிநொச்சி மாவட்டத்தின் முன்னாள் அரச அதிபரும் மகாதேவா சைவ சிறாா் (குருகுலம்) இல்லத்தின் தலைவருமான அமரர் திருநாவுகரசு இராசநாயகத்தின் இறுதி நிகழ்வுகள் இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது.நூற்றுக்கணக்கான குழந்தைகள் கதறி அழ கிளிநொச்சி ஜெயந்திநகரில் அமைந்துள்ள சிறுவா் இல்லத்தில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டு அஞ்சலி உரைகள் இடம்பெற்று பூநகரி மட்டுவில்நாடு பொது மயானத்தில் இறுதி நிகழ்வு இடம்பெற்றது.
அதிகாரிகள் அரசியல் தரப்புக்கள் பொது மக்கள் என ஏராளமானவா்கள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினாா்கள். அந்த வகையில் பாராளுமன்ற உறுப்பினா்களான மாவை சேனாதிராஜா, சிறிதரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமாா், மாகாண சபை உறுப்பினா் தவநாதன் செஞ்சோலை சிறுவா் இல்ல இயக்குநர் குமரன் பத்மநான்( கேபி) யாழ் போதான வைத்தியசாலை பணிப்பாளர் சத்தியமூர்த்தி உள்ளிட் ட பலர் கலந்துகொண்டனர்.
Spread the love