குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஆயுத்தாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என நைஜீரிய அரசாங்கம் தெரிவித்துள்ளது. கடந்த ஒரு வார காலத்தில் நைஜீரிய அரசாங்கத்திற்கும், ஆயுததாரிகளுக்கும் இடையில் யுத்த நிறுத்தம் அமுல்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நைஜீரிய அமைச்சர் உசானி உகுரு உசானி இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார். ஆயுததாரிகள் பொறுமையுடன் பேச்சுவார்த்தைகளில் பங்கேற்க வேண்டுமென கோரியுள்ளார்.
அரசாங்கம் குறித்த பகுதிகளில் அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்து வருவதாகத் தெரிவித்துள்ளார். எனினும் மனித உரிமை அமைப்புக்கள் குறித்த பகுதிகளில் கடுமையான வறுமை நீடித்து வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது