166
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் சீனாவின் பிரசன்னமானது இந்திய உறவுகளை பாதிக்காது என இந்திய கரையோரப் பாதுகாப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. கரையோரப் பாதுகாப்புப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் ராஜேந்திர சிங் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் சீனாவின் பிரசன்னம், இந்திய இலங்கை உறவுகளில் பாதிப்பை ஏற்படுத்தாது என அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையுடன் இந்தியா புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திட்டுள்ளதாகவும் பாதிப்புக்கள் எதுவும் ஏற்படக்கூடிய சாத்தியமில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Spread the love