குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
உள்ளுராட்சி மன்றங்களுக்கான எல்லை நிர்ணயம் செய்வதற்காக சர்வகட்சிப் பேரவையை கூட்டுமாறு கோரிக்கை கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உள்ளுராட்சி மன்றங்கள் மற்றும் மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
மாகாணசபைத் தேர்தல்களையும் தொகுதிவாரி அடிப்படையில் நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ள நிலையில் இதற்காகவும் எல்லை நிர்ணய குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. எல்லை நிர்ணயம் தொடர்பில் பல்வேறு தரப்பினரும் பல்வேறு யோசனைகளை முன்வைத்து வருகின்றனர். இந்த நிலையில் அனைத்து கட்சிகளினதும் யோசனைக்கு அமைய இறுதி தீர்மானம் எடுக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.