மியான்மரின் நடைமுறை தலைவராகக் கருதப்படும் ஆங் சான் சூகி ஐ.நா. பொதுச் செயலாளர் ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் அன்ரனியோ குட்டாரஸ் ( Antonio Guterres) ஐச் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். பிலிப்பைன்சின் மணிலாவில் நடைபெற்றுவரும் ஆசியான் உச்சி மாநாட்டுக்கு இடையில் ஆங் சான் சூகியை அன்ரனியோ குட்டாரஸ் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இந் சந்திப்பின் போது மியன்மாரின் ரக்கைன் மாநிலத்தில் ரொஹிஞ்சா முஸ்லிம்மக்களுக்கெதிராக இடம்பெறும் வன்முறைகள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரக்கைன் மாநில மக்களுக்கு மனிதநேய அடிப்படையிலான உதவிகள் செல்வதனை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் ரோஹிங்கியா மக்கள் பாதுகாப்பாகவும், கண்ணியத்துடனும் வாழ்வதற்கான வழிவகைகள் ஏற்படுத்தப்பட வேண்டும் எனவும் ஆங் சான் சூகியிடம் அன்ரனியோ குட்டாரஸ் வலியுறுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரக்கைன் மாநிலத்தில் ரொஹிஞ்சா முஸ்லிம்மக்கள் ஒடுக்குமுறைக்கு எதிராக ஆயுதம் தாங்கிய போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றதனையடுத்து அவர்களுக்கெதிராக ராணுவம் தாக்குதலகளினை மேற்கொண்டு வருகின்றது. இதன் காரணமாக சுமார் 6 லட்சம் ரோஹிங்கியா முஸ்லிம்கள் பங்களாதேசுக்கு புலம்பெயர்ந்து சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது