மக்கள் விடுதலை முன்னணி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி செயற்பாட்டாளர்கள் சிலர் ஜனாதிபதிக்கு ஆதரவு தெரிவித்து ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்துள்ளனர். மக்கள் விடுதலை முன்னணியின் கண்டி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திமுது அபேகோன் உள்ளிட்ட கண்டி மாநகர சபை மக்கள் விடுதலை முன்னணி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் உறுப்பினர்கள் சிலர் இன்று (15) ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவைச் சந்தித்து ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியுடன் இணைந்துகொண்டனர்.
கண்டியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இச்சந்திப்பு இடம்பெற்றது. ஜனாதிபதி நாட்டுக்காக முன்னெடுத்திருக்கும் நிகழ்ச்சித்திட்டங்களுக்கு தமது முழுமையான ஆதரவை வழங்குவதாக அவர்கள் தெரிவித்தனர். மத்திய மாகான முதலமைச்சர் திலின பண்டார தென்னகோனுடன் வருகை தந்த இவர்கள், ஜனாதிபதியை சந்தித்தனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது